வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (14:53 IST)

புதிய கட்சி தொடங்கினார் பாஜக பிரபலம்: பா.ஜ.கவுக்கு பின்னடைவா?

janarthana reddy
புதிய கட்சி தொடங்கினார் பாஜக பிரபலம்: பா.ஜ.கவுக்கு பின்னடைவா?
கர்நாடக மாநிலத்தில் உள்ள பாஜக பிரபலம் ஜனார்த்தன ரெட்டி திடீரென புதிய கட்சியை தொடங்கி உள்ள நிலையில் அம்மாநிலத்தில் பாஜகவுக்கு பின்னடைவு இருக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
 
கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி மாநிலம் முழுவதும் பிரபலமானவர் என்பதும் குறிப்பாக தனது மகளுக்கு 650 கோடி ரூபாய் செலவில் திருமணம் செய்து வைத்து நாட்டையே அதிர வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த 20 ஆண்டுகளில் பாஜகவின் முக்கிய தலைவராக இருந்த ஜனார்த்தன ரெட்டி தற்போது திடீரென தனிக்கட்சி தொடங்கி உள்ளதாக தெரிகிறது.
 
இது குறித்து ஜனார்த்தன ரெட்டி கூறும்போது நான் பாஜகவில் உறுப்பினராக இல்லை, அந்த கட்சிக்கும் எனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. பாஜக மேலிடத் தலைவர்கள் நான் பாஜகவில் இருப்பதாக கூறி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தான் புதிய கட்சியை தொடங்கி உள்ளேன் என்று கூறியுள்ளார். 
 
முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சி தொடங்கியிருப்பதாக கூறியிருப்பது விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் கர்நாடக மாநிலத்தில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டு வருகிறது
 
Edited by Mahendran