வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 8 ஏப்ரல் 2019 (08:22 IST)

ராகுல்காந்தி போல் கேரளாவில் போட்டியிட தயாரா? மோடிக்கு சசிதரூர் சவால்

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரளாவில் போட்டியிடுவது போல் பிரதமர் மோடியால் கேரளாவில் போட்டியிட முடியுமா? என காங்கிரஸ் எம்பி சசிதரூர் சவால் விடுத்துள்ளார்.
 
இதுவரை பெரும்பாலான பிரதமர் வேட்பாளர்கள் உத்தரபிரதேச மாநிலத்தில் மட்டுமே போட்டியிடுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உபி மாநிலத்திலுள்ள அமேதி தொகுதியிலும், பிரதமர் மோடி, உபி மாநிலத்தில் உள்ள வாரணாசி தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.
 
இந்த நிலையில் திடீரென ராகுல்காந்தி, கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்து அதற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துவிட்டார். இந்த நிலையில் ராகுல் காந்தியை போல தமிழகம் மற்றும் கேரளாவில் போட்டியிடும் தைரியம் பிரதமர் மோடிக்கு இருக்கிறதா? என காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார்
 
ஸ்மிருதி இரானிக்கு பயாந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பாதுகாப்பான தொகுதியை நோக்கி ஓடுகிறார் என விமர்சனம் செய்யும் பாஜக, முடிந்தால் பிரதமர் மோடியை தமிழகம் அல்லது கேரளாவில் போட்டியிட வைத்து வெற்றி பெற செய்து பாருங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
மேலும் பாஜக ஆட்சிக்காலத்தில் தென்னிந்தியாவில் உள்ள மாநிலங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதாகவும், நாட்டின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்கும் பாலமாக விளங்க வேண்டும் என்பதற்காகவே வயநாடு தொகுதியை ராகுல் காந்தி தேர்வு செய்துள்ளதாகவும் சசிதரூர் குறிப்பிட்டார்