’அதற்காக ’ இரவு பகலாக உழைப்போம் - மோடி ’டுவீட் ‘

modi
Last Updated: சனி, 6 ஏப்ரல் 2019 (18:24 IST)
மக்களவைத் தேர்தல் நெருங்கி விட்டது. இதனால் அனைத்து கட்சிகளும் தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  கருத்துக் கணிப்புகளும் அவ்வப்போது வெளிவந்து கட்சித் தலைவர்களுகு பீதியைக் கிளப்பிவருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
கட்சியானது தேசத்துக்கும் சமூகத்துக்கும் சேவை ஆற்றத்தான் உள்ளது. பாஜக கட்சியானது நம் நாட்டின் பாரம்பரிய பண்பாடு, தேசப்பற்று ஆகியவற்றால்தான் இத்தைகைய நிலையை எட்டியுள்ளது. அனைவருக்கும் தேவையான வளர்ச்சிப் பணிகள் தேசம் முழுவதும் கிடைக்கிறது. என்று பதிவிட்டிருந்தார்.
 
தேசத்தில் உள்ள மக்களின் ஆசிர்வாதத்தைப் பெற நாம் நமது கூட்டணிக் கட்சியினருடன் இரவு பகல் பாராது உழைப்போம் என்று நாம் நம்புகிறேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :