ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (16:55 IST)

ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்ட சரிதா நாயரின் வேட்புமனு: தேர்தல் அதிகாரி அதிரடி நடவடிக்கை

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி சமீபத்தில் கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்து அதற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில்  ராகுல்காந்தியை தோற்கடிக்க கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒருபுறம் தீவிரமாக இருக்க, முதல்முறையாக தென்னிந்தியாவில் போட்டியிடும் ராகுல்காந்தியை இந்த தொகுதியின் எம்பி ஆக்கியே தீருவோம் என்று கேரள காங்கிரஸார் இன்னொரு புறம் சவால் விடுத்துள்ளனர்.
 
இந்த நிலையில் திடீர் திருப்பமாக சோலார் பேனல் மோசடியில் சிக்கிய நடிகையும் தொழிலதிபருமான சரிதா நாயர், ராகுல்காந்தியை எதிர்த்து வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். அதுமட்டுமின்றி காங்கிரஸ் எம்பி ஹிபி ஈடன் போட்டியிடும் எர்ணாகுளம் தொகுதியிலும் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
 
இந்த நிலையில் வயநாடு, எர்ணாகுளம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் சரிதா நாயரின் வேட்புமனுக்களை தள்ளுபடி செய்து தேர்தல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர். சோலார் பேனல் மோசடி வழக்கில் சரிதா நாயர் இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்றவர் என்பதே அவரது வேட்புமனு நிராகரிப்புக்கு காரணமாக கூறப்பட்டுள்ளது. தனக்கு வெற்றி பெறும் நோக்கம் இல்லை என்றும், தனக்கு நடந்த அநியாயத்தை ராகுல்காந்தி தட்டிக்கேட்கவில்லை என்பதால் போட்டியிடுவதாக அறிவித்த சரிதா நாயரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.