வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 7 ஏப்ரல் 2019 (19:30 IST)

ராகுல்காந்தி போட்டியிடுவதால் கமல் கட்சிக்கு கம்யூனிஸ்ட் ஆதரவா?

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு தொகுதியில் ராகுல்காந்தி திடீரென போட்டியிட முடிவெடுத்ததால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைமைதான் பரிதாபமாக உள்ளது. கேரளாவில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்கு கேட்கும் கம்யூனிஸ்ட், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு வருகிறது.
 
இந்த நிலையில் புதுவை தொகுதியில் ஒரு பகுதியான மாஹே கேரளாவை ஒட்டி உள்ளது. இங்கு புதுவை காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கேட்க கம்யூனிஸ்ட் கட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பக்கத்து ஊரில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்துவிட்டு மாஹேயில் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக ஓட்டு கேட்க முடியாது என்பதால் மாஹே தொகுதியில் மட்டும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுவை வேட்பாளர் சுப்பிரமணியனுக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியினர் வேலை செய்வதாக கூறப்படுகிறது. இதனை சுப்பிரமணியனும் உறுதி செய்துள்ளார்.
 
ஆனால் கமல் கட்சியின் வேட்பாளரின் இந்த கருத்துக்கு கம்யூனிஸ்ட் கட்சி மறுப்பு தெரிவித்துள்ளது. "மாஹே கம்யூனிஸ்ட் கட்சியினர் பற்றி தவறாக மக்கள் நீதி மய்யத்தினர் குறிப்பிடுவதாகவும், எழுத்துப்பூர்வமாக மாஹே பிராந்தியத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆதரவு கடிதம் ஏதும் தரவில்லை என்றும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொய் சொல்வதாகவும் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.