வெள்ளை மாளிகைக்கு செல்கிறது நடிகை சமந்தாவின் சேலை
பிரபல நடிகை சமந்தா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டு, அதே வேகத்தில் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டிருக்கின்றார். இந்த நிலையில் இன்று இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப் மகள் இவாங்கா டிரம்புக்கு கைத்தறி சேலை ஒன்றை சமந்தா பரிசளிக்க உள்ளாராம்
இன்று ஐதராபாத் நகரில் நடைபெறவுள்ள உலக தொழில் முனைவோர் மாநாட்டில் கலந்து கொள்ள இவாங்கா டிரம்ப் இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடி உள்பட பல பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ள இந்த நிகழ்ச்சியில் நடிகை சமந்தா, இவாங்கா டிரம்புக்கு கைத்தறி சேலை ஒன்றை பரிசளிக்கவுள்ளார். நடிகை சமந்தா தெலுங்கா மாநிலத்தின் கைத்தறி சேலைகளுக்கான பிராண்ட் அம்பாசிடர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபேஷன் டிசைனரான இவாங்காவுக்கு பிடிக்கும் வகையில் சமந்தாவே நேரில் சென்று மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கைத்தறி சேலையை தேர்வு செய்து வைத்துள்ளாராம். சமந்தா வழங்கப்போகும் கைத்தறி சேலை இன்னும் சில நாட்களில் வெள்ளை மாளிகைக்கு செல்லவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.