1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2017 (09:54 IST)

“முழுமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்த விரும்புகிறேன்” - சமந்தா

‘முழுமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்த விரும்புகிறேன்’ என நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

 
நடிகைகளுக்குத் திருமணம் ஆனாலே நடிப்புக்கு முழுக்கு போட்டு விடுவார்கள் அல்லது மார்க்கெட் போய் நடிக்க  வாய்ப்பில்லாதபோது திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால், முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருமணம் செய்து  கொண்டுள்ளார் சமந்தா.
 
ஜோதிகா போன்றவர்கள் திருமணமாகி சில ஆண்டுகள் கழித்து மறுபடியும் நடிக்க வந்துள்ளனர். அதுவும் அவர்கள்  கேரக்டருக்குத் தகுந்த மாதிரி மெச்சூர்டான படங்களில் நடிக்கின்றனர். ஆனால், திருமணத்துக்கு முன்பு ஹீரோயினாக நடித்த மாதிரியே திருமணத்துக்குப் பின்பும் நடித்து வருகிறார் சமந்தா.
 
“திருமணத்துக்கு முன்பு ‘மனம்’, ‘கத்தி’, ‘தெறி’ போன்ற நல்ல படங்களில் நடித்தேன். திருமணத்துக்குப் பின்பும் அதேபோல் நல்ல கதைகளில் நடிக்க ஆசைப்படுகிறேன். என்னுடைய முழுமையான நடிப்பாற்றலை வெளிப்படுத்தும் படங்களில் நடிக்க விரும்புகிறேன்” என்கிறார் சமந்தா.