1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : செவ்வாய், 14 நவம்பர் 2017 (04:13 IST)

பற்றி எரிகிறது நாகார்ஜுனனின் அன்னபூர்ணா ஸ்டுடியோ: பெரும் பரபரப்பு

தமிழ், தெலுங்கு உள்பட பல தென்னிந்திய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறும் ஐதரபாத் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இரண்டு படங்களின் படப்பிடிப்பு தளங்கள் முற்றிலும் தீயில் சேதமடைந்துவிட்டதாகவும், தீயை கட்டுப்படுத்த நான்கு இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது


 


பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனனுக்கு சொந்தமான இந்த ஸ்டுடியோ தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ளது. பல அடுக்கு தளங்களுடன் நவீன வசதிகளைக் கொண்ட இந்த ஸ்டுடியோ தெலுங்கு சினிமா உலகினர்களின் விருப்பத்திற்குரிய ஸ்டுடியோக்களில் ஒன்று. நாகார்ஜுனனின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான நாகேஸ்வரராவ் அவர்கள் கடந்த 1975 ஆம் ஆண்டு இந்த ஸ்டுடியோவை கட்டி முடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாகார்ஜுனனின் மகன் நாகசைதன்யாவுக்கும் நடிகை சமந்தாவுக்கும் திருமணம் ஆன ஒருசில நாட்களில் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் விபத்து ஏற்பட்டுள்ளது அக்குடும்பத்தினர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.