வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 8 நவம்பர் 2017 (19:01 IST)

சமந்தா-நாகசைதன்யா திருமண வரவேற்பு தேதி அறிவிப்பு

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான சமந்தாவின் திருமணம் அக்டோபர் மாதம் 6 மற்றும் 7ஆம் தேதி நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த திருமணத்திற்கு இருவீட்டார்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மேலும் திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தேனிலவும் சென்று திரும்பிவிட்டனர்


 


இந்த நிலையில் திரையுலகினர் மற்றும் நண்பர்களுக்காக சமந்தா-நாகசைதன்யா திருமண வரவேற்பை வரும் 12ஆம் தேதி நடத்த நாகார்ஜூனா திட்டமிட்டுள்ளார்.

ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெறும் இந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு தமிழ், தெலுங்கு திரையுலக பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.