செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 21 நவம்பர் 2023 (08:07 IST)

சபரிமலை ஐயப்பன் கோயிலில் 16 மணி நேரம் தரிசனம் செய்யலாம்: தேவஸ்தானம் அறிவிப்பு..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 16 மணி நேரம் தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதை அடுத்து தரிசன நேரம் 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மகரவிளக்கு பூஜை நடைபெற்ற நிலையில் மண்டல பூஜைகள் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் ஐயப்பனை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதால் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நேர நிலை உள்ளது.

இந்த நிலையில் கூட்ட நெரிசலை குறைப்பதற்காக 16 மணி நேரம் தரிசனம் செய்யலாம் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர். அதிகாலை 3 மணிக்கு நடை திறந்ததிலிருந்து மதியம் ஒரு மணி வரை ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்றும் அதன் பின்னர் 4 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

இதனால் நீண்ட நேரம் பக்தர்கள் காத்திருக்காமல் தரிசனம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Siva