ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 20 நவம்பர் 2023 (17:00 IST)

சபரிமலை சீசன்: சென்னையிலிருந்து இன்று இரவு சிறப்பு ரயில்

சபரிமலை சீசனை முன்னிட்டு அவ்வப்போது சிறப்பு ரயில்களை இயக்கி வரும் தென்னக ரயில்வே இன்று இரவு சென்னையில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளது.

சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சென்னையில் இருந்து எர்ணாகுளத்திற்கு  இன்று இரவு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு 11:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 11:55 மணிக்கு  எர்ணாகுளம் சென்றடையும்.

இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர்,  பாலக்காடு, திருச்சூர், ஆலுவா வழியாக  எர்ணாகுளம் செல்லும்.  இந்த ரயிலுக்கான முன்பதிவு செய்யப்படுவதாகவும், தேவையான சபரிமலை பக்தர்கள் செய்து கொள்ளலாம் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

எனவே சபரிமலை செல்லும் பக்தர்கள் இந்த சிறப்பு ரயிலை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Mahendran