1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 19 ஜூலை 2022 (10:03 IST)

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி! – ரூ.80 ஐ தொட்டதால் மக்கள் அதிர்ச்சி!

1 rupee coin
இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது தொழில் நிறுவனங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்திய ரூபாயின் டாலருக்கு நிகரான மதிப்பு கடந்த சில வாரங்களாக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இது டாலர்களில் சம்பளம் பெறும் என்.ஆர்.ஐகளுக்கு ஒருவிதத்தில் நிம்மதியை அளித்தாலும், உள்நாட்டு தொழில்நிறுவனங்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன.

ஏற்றுமதி, இறக்குமதி, வெளிநாட்டு ஒப்பந்தங்கள் டாலர் கணக்கீட்டில் மேற்கொள்ளப்படும் பட்சத்தில் இந்திய ரூபாயின் இந்த வீழ்ச்சி காரணமாக ரூபாய் மதிப்பில் அதிகமான தொகையை செலவழிக்க வேண்டிய கட்டாயம் எழுகிறது. தற்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.80 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் முதலீட்டாளர்கள், தொழில்நிறுவனங்கள் என சகல தரப்பினரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.