திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 17 மே 2022 (17:15 IST)

வரதட்சணைக்காக மனைவி, மகளை கொல்ல முயன்ற தொழிலதிபர் !

dowry
வரதட்சணை ஆசையில் மனைவி, மகளை தொழிலதிபர் குடும்பம் சித்ரவதை செய்துள்ள சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஐதராபாத் ஆந்திரா மற்றும் தெலுங்காவில் புல்லாரெட்டி ஸ்வீட்ஸ் என்ற இனிப்பு கடைகளை நடத்தி வருபவர்  ராகவாரெட்டி. இவரது மகன் ஏக் நாத் ரெட்டிக்கும் பெங்களூருவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகள் பிரகண்யாவை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.  இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இவர்கள் திருமணத்தின்போது மாப்பிள்ளைக்கு  லட்சக்கணக்கில் பணம் மற்றும் நகைகள் என ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்புள்ள வரதட்சணையாகப் பெறபப்ட்டதாகக் கூறப்படுகிறது.

பின்னர் திரும்பவும் மனைவியுடன் ஏக் நாத் வரதட்சணை வேண்டுமென கேட்டு அவருக்கு தொல்லை கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தை மனைவியை விவாகரத்து செய்ய  முயற்சித்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு இதற்கான நடவடிக்கைகளை ஏன் நாத் எடுத்த நிலையில், அவரது விவாகரத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனால் அவரும் அவரது மனைவியும் ஒரே வீட்டில் வசித்தனர். இந்த நிலையில் கடந்த 10 ஆம் தேதி தனது வீட்டில் மனைவி மற்றும் மகள் இருக்கும் அறைக்குச் செல்லும் மின்சாரம் மற்றும் தண்ணீர் தொடர்ப்பை துண்டித்துள்ளார்.

அத்துடன் தன் மகன் மற்றும் மகளை  அவர் கொல்ல முயற்சித்தாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரகன்யா போலீஸில்  புகார் கொடுத்த நிலையில் ஏக் நாத், அவரது பெற்றோர்மீது போலீஸார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.