வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 5 அக்டோபர் 2019 (18:46 IST)

வங்காள தேசத்துடன் 7 ஒப்பந்தங்கள் செய்த பிரதமர் மோடி!

இந்தியாவுக்கு அரசு முறை சுற்றுப்பயணமாக வந்த வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினாவோடு 7 புதிய உடன்படிக்கைகளை செய்து கொண்டார் பிரதமர் மோடி.

வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா அரசுமுறை பயணமாக இந்தியா வந்தார். அவரை வரவேற்று விருந்தளித்த பிரதமர் மோடி இருநாட்டு உறவுகள் குறித்து பேசினார். பிறகு இருநாடுகளுக்கிடையே பொருளாதார உறவுகளை மேம்படுத்தும் வகையிலான 7 ஒப்பந்தங்களில் இருவரும் கையெழுத்திட்டனர்.

வங்காளத்திலிருந்து எரிவாயுக்களை இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் திட்டமும் அதில் முக்கியமான ஒன்றாகும். இதனால் இந்தியாவின் எரிசக்தி தேவைக்கு இது உதவி புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.