செருப்பு மாலை.. கழுதையில் ஊர்வலம் : முன்னாள் தலைவர்களுக்கு நேர்ந்த கதி ! வைரல் வீடியோ
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, பகுஜன் சமாஜ் கட்சி முன்னாள் தலைவர் , அக்கட்சி தொண்டர்களாலேயே செருப்பு மாலை அணிவிக்கப்பட்டு, கழுதையில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வரப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பகுஜன் சமாஜ் மாநில முன்னாள் தலைவர் சீதராம், தேசிய ஒருங்கிணைப்பாளர் கௌதம் ஆகியோர் ஜெய்ப்பூருக்கு வருகை தந்தனர்.
அப்போது, இருவரையும் சூழந்து கொண்ட பகுஜன் சமாஜ் கட்சியின் தொண்டர்கள் , இருவருக்கும் செருப்புமாலை அணிவித்து, முகங்களில் கருப்பு மை ஊற்றிவிட்டு, கழுதையில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
அதாவது, பகுஜன் சமாஜ் கட்சியின் இருந்தபோது, சீதாராம், ராஜி கௌதம் ஆகிய இருவரும் கட்சிக்கு எதிரான செயல்பட்டதாக வந்ததாக அக்கட்சி தொண்டர்கள் கட்சிதலைமையிடம் குற்றம் சாட்டினர்.
அதனைடுத்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ராஜஸ்தான் பகுஜன் சமாஜ் கட்சியின் செயற்குழுவை கலைத்துவிட்டு, சீதாராமை கட்சியிலிருந்து நீக்கினார். ஆனால், ராம்ஜியை தேசிய ஒருங்கிணைப்பாளராக மாயாவதி நியமித்தார்.
இந்நிலையில் ,இன்று அக்கட்சி தொண்டர்கள் இந்தகைய செயல்களில் ஈடுபட்ட் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.