வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2019 (08:49 IST)

பாஜகவில் ரஜினிகாந்த் இணைய வேண்டும்: பொன் ராதாகிருஷ்ணன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் தயார் நிலையில் வைத்திருப்பதாகவும், வரும் ஏப்ரல் மாதம் அல்லது தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு மாதங்களுக்கு முன் அவர் கட்சி குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக வெளியிடுவார் என்றும் அவர் வட்டாரங்கள் கூறுகின்றன. இருப்பினும் ஒரு சிலர் ரஜினிகாந்த் அதிமுகவில் இணைவார் என்றும், அல்லது பாஜகவில் இணைவார் என்றும் வதந்தியை கிளப்பி வருகின்றனர். இந்த நிலையில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா? அல்லது ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் இணைவாரா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது 
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்தால் அதனை தான் வரவேற்பதாகவும், ஆனால் அதே நேரத்தில் அவர் பாஜகவில் இணைய வேண்டும் என்ற விருப்பம் தனக்கு இருப்பதாகவும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் நேற்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிகாந்த் மட்டுமன்றி தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களும் பாஜகவில் சேர வேண்டும் என்பதே எனது ஆசை என்றும் அவர் தெரிவித்தார். பொன் ராதாகிருஷ்ணனின் ஆசையை ரஜினிகாந்த் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் 
 
இந்நிலையில் ரஜினி கட்சி ஆரம்பித்தால் அந்த கட்சியில் பல கட்சியின் அரசியல் பிரமுகர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக அதிமுகவில் இருந்து அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் திமுக மத்திய அமைச்சர் முக அழகிரி உள்பட பலர் ரஜினி கட்சியில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் ரஜினி கட்சி ஆரம்பித்த உடன் தான் இது குறித்த தகவல்கள் உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது