திங்கள், 17 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 பிப்ரவரி 2025 (08:54 IST)

அரசாங்க தகவல்களை திருடுகிறதா DeepSeek AI? தடை விதித்த தென்கொரியா!?

Deepseek

உலக அளவில் பேசுபொருளாகியுள்ள சீனாவின் DeepSeek AI-ஐ தடை செய்து தென்கொரியா உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

உலக அளவில் Artificial Intelligence-ன் வளர்ச்சி அதிகரித்துள்ள நிலையில் ChatGPT, Gemini AI போன்ற அமெரிக்க ஏஐ-கள் உலக அளவில் பெரும் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் அவற்றிற்கு போட்டியாக சமீபத்தில் சீன நிறுவனம் வெளியிட்ட DeepSeek AI பல்வேறு வசதிகளுடன் உலகம் முழுவதும் பல பயனர்களை ஈர்த்து வருகிறது.

 

பல நாடுகளில் அரசு துறைகளிலும் DeepSeek AI-ஐ பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில்தான் தென்கொரிய அரசு டீப்சீக் ஏஐ செயல்பாடுகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. அரசின் பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கணினி உள்ளிட்ட சாதனங்களில் டீப்சீக்கை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

அமெரிக்காவின் நட்பு நாடாக விளங்கும் தென்கொரியாவின் பாதுகாப்பு தகவல்களை டீப்சீக் மூலமாக சீனா திருடக்கூடும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாலேயே டீப்சீக் தடை செய்யப்பட்டுள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

 

Edit by Prasanth.K