வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinojkiyan
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (21:26 IST)

உருது மொழியை தடை செய்ய வேண்டும், சீமானை கைது செய்ய வேண்டும் - கல்கி ராஜசேகர்

இந்தியாவில் உருது மொழியை தடை செய்ய வேண்டுமென்றும், சீமானை கைது செய்வதோடு, நாம் தமிழர் கட்சியையும் தடை செய்ய வேண்டுமென்றும் கரூரில் அகில பாரத இந்து மஹா சபா கட்சி மாநில தலைவர் கல்கி ராஜசேகர் கரூரில் அதிரடி பேட்டியளித்துள்ளார்.

கரூர் அருள்மிகு ஸ்ரீ பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று மதியம் இந்து மஹா சபா கட்சியின் மாநில தலைவர் கல்கி ராஜசேகர் ஆலய தரிசனம் மேற்கொண்ட அவர், செய்தியாளர்களை சந்தித்தார். இந்திய தேசம் முழுவதும் ஒரு அசாதரணமான சூழல் ஏற்பட்டு வருகின்றது. அயோத்தி வழக்கு விசாரணை தொடங்கியதில் இருந்து இதுவரை 4 இந்துத்துவா தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாரதீய ஜனதா கட்சி பிரமுகர் உள்பட, அகில பாரத இந்து மஹா சபா கட்சியின் மூத்த தலைவர் 1998 லிருந்து 2017 வரை அந்த அயோத்தி வழக்கினை பொறுப்பு எடுத்து நடத்தி வந்தவர் நேற்று படுகொலை செய்யப்பட்டார் ஜிகாதிகளினால், சுட்டுக்கொல்லப்பட்டு, கழுத்து அறுக்கப்பட்டது,. ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளின் செயல் பாணியில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மத்தியில். மாநிலத்திலும் அங்கு பா.ஜ.க கட்சி ஆளும் போதே இது போன்ற செயல் நடைபெற்றுள்ளதற்கு கடுமையான கண்டனத்தினை தெரிவித்து கொண்டதோடு, இந்த செயல் தொடர்ந்து நடைபெற்று வருவதற்கும் கண்டனம் தெரிவித்துக் கொண்டனர். தமிழகத்தில் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தியின் படுகொலையை நாங்கள் தான் செய்தோம் என்று கூறி வரும் நாம் தமிழர் கட்சி சீமான் பட்டவர்த்தமாக ஒத்துக் கொள்கின்றார்.

இந்த தேசத்திற்கு விரோதமாக இந்திய தேசத்திற்கு எதிராகவும், இறையாண்மைக்கு எதிராக கூறி வரும் சீமான் இந்துக்களையே இழிவு படுத்தி பேசி வரும் சீமான் மீது மத்திய, மாநில அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இந்துக்கள் தான் தமிழர், தமிழர் தான் இந்துக்கள், இங்கு ஆரியர் திராவிடர் என்பது இல்லை, அது பிரிட்டீஸ்காரர்களால் ஏற்படுத்தப்பட்ட கதை என்றும் தெரிவித்த அவர், திராவிடர் என்பதும், இந்த பூமியின் மண்ணின் மைந்தன் யார் என்பதை சீமான் சொல்ல வேண்டுமென்றும், இந்த கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்றதோடு, காஷ்மீர் பயங்கரவாதிகளை கையில் வைத்துக் கொண்டு விடுதலைப்புலிகளின் பெயரை கொச்சைப்படுத்தி வரும் சீமானை உடனடியாக கைது செய்ய வேண்டுமென்றும், நாம் தமிழர் கட்சியையும் தடை செய்ய வேண்டுமென்றதோடு, அகில பாரத இந்து மஹா சபா வேண்டுகொள் விடுக்கின்றது என்றும் மேலும், இந்திய முழுவதும் இந்தி மொழி ஒரு அத்யாசவசியான ஒன்று என்றும், அதை எதிர்ப்பதற்கு கண்டனம் தெரிவித்த அவர், எப்படி ஆங்கில மொழி ஒரு அத்யாவசிய தேவையோ, அதைப்போல தான், இந்தி மொழி அவசியம் என்றதோடு, இந்தியாவில் உருது தேவையா ? ஆகையால் உருது மொழியை தடை செய்ய வேண்டும், இந்த தேசத்தில் சிறுபான்மை மக்களால் பேசப்படாத மொழி என்றும், ஆகவே, உருது மொழியை அங்கிகரித்துக் கொள்கின்றனர்.

அரபிக்கல்லூரிகளில் உருது மொழியை அங்கிகரித்துக் கொள்கின்றனர். அதை பற்றி வாய் திறக்காத திராவிட கட்சியினர், தமிழ் போராளிகள் அதற்கு விடை சொல்ல வேண்டுமென்றும், உருது மொழியை தடை செய்ய வேண்டுமென்றும், அரபுக்கல்லூரியில் சட்டமேதை அம்பேத்கரின் சிலையை நிறுவ வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தார்.