செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: சனி, 25 ஜனவரி 2020 (13:49 IST)

சங்கிலி கொண்டு கட்டி வைக்கப்பட்ட 73 பேர் மீட்பு !

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள கிராமத்தில் ஒரு முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட நோயாளிகள் சிலர் அடைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக போலீஸாருக்கு புகார் கொடுத்தனர்.
அதனடிப்படையில் குறிப்பிட்ட இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார், அங்கு ஒரு அறையில் அடைத்து வைத்து சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டிருந்த 73 பேரை போலீஸார் மீட்டனர்.
 
மேலும், முதியோரை அறையில் அடைத்து அறையில் பூட்டி வைத்திருந்ததாக , பெற்றோர் மற்றூம் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலனுக்கான சட்டம் 2007 கீழ் முதியோர் இல்ல நிர்வாகத்தினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.