1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : சனி, 25 ஜனவரி 2020 (13:08 IST)

நிர்பயா குற்றவாளிகளின் மனு தள்ளுபடி..

திகார் சிறை நிர்வாகம் மீது புகார் கூறி நிர்பயா குற்றவாளிகள் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அம்மனுக்களை தள்ளுபடி செய்துள்ளது.

நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளை வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்ய சிறை நிர்வாகம் போதிய ஆவணங்களைத் தர மறுப்பதாக குற்றவாளிகளில் இருவரான அக்சய்குமார் சிங், பவன்குமார் சிங் ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் ஆவணங்கள் தரப்பட்டதாக சிறை தரப்பு பதிலளித்துள்ள நிலையில் குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்களை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.