மத்திய பட்ஜெட்; மக்கள் எதிர்பார்ப்புகள் என்னென்ன??

Arun Prasath| Last Updated: வியாழன், 23 ஜனவரி 2020 (20:46 IST)
வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ள நிலையில் தனியார் செய்திதாள் ஒன்று மக்களிடம் ஆய்வு நடத்தியுள்ளது.

வருகிற பிப்ரவரி 1 ஆம் தேதி நிர்மலா சீதாராமன் 2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார். இது நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக பதவியேற்றப்பின் தாக்கல் செய்யப்படுகிற இரண்டாவது பட்ஜெட் ஆகும். இந்நிலையில் தனியார் பத்திரிக்கை நிறுவனம் ஒன்று இது குறித்து மக்களிடம் இணையத்தில் ஆய்வு நடத்தியுள்ளது.

இந்த ஆய்வில் 50 சதவிகிதத்தினர் வருமான வரிச் சலுகையை உயர்த்திட வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. அதே போல் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அதிக நிதியை 30 சதவிகிதத்தினர் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது.

விவசாயத்திற்கு  16 சதவிகிதத்தினரும், கட்டமைப்புக்கு 26 சதவிகிதத்தினரும் அதிக நிதியை எதிர்பார்ப்பதாக தெரியவந்துள்ளது. மேலும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்கு 11 சதவிகிதத்தினர் அதிக நிதியை ஒதுக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதே போல் நுகர்வோர் நலனில் வரியை குறைந்து ஊக்க சலுகை அளிக்க வேண்டும் என 29 சதவிகிதத்தினர் கூறியுள்ளதாக தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :