தொடர்புடைய செய்திகள்
- வெங்காய விலைக்கு எதிராக போராடும் ப.சிதம்பரம்..
- 106 நாட்களுக்கு பின் சிறையில் இருந்து வெளியே வந்தார் ப.சிதம்பரம்
- ”சிதம்பரத்தை சிறையில் வைத்தது பழிவாங்கும் நடவடிக்கை…” ராகுல் குற்றச்சாட்டு
- பிரதமரை சந்தித்த திமுக எம்.பி.க்கள்.. முன்வைத்த கோரிக்கைகள் என்னென்ன??
- சிறைவாசத்திலிருந்து விடுதலையாகிறார் ப.சிதம்பரம்..
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை..
ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கொடுக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதம் (ரெப்போ) மற்றும் வங்கிகளிலிருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்கான வட்டி விகிதம் (ரிவர்ஸ் ரெப்போ) ஆகியவை குறித்தான மாற்றங்கள் ரிசர்வ் வங்கியின் நிதி வங்கி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் இந்த கூட்டம் தற்போது மீண்டும் கூடியது. இதில் 5.15 % ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அதே போல் 4.90 % ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதத்திலும் எந்த மாற்றமும் இல்லை எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் வீடு மற்றும் வாகன கடன்களின் வட்டியில் எந்த மாற்றமும் இருக்காது. கடந்த ஓராண்டு மட்டும் ரெப்போ விகிதம் தொடர்ந்து 5 முறை 1.35 சதவீதம் குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
