1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. P Chidambaram released from jail

சிறைவாசத்திலிருந்து விடுதலையாகிறார் ப.சிதம்பரம்..

ப சிதம்பரம்
ஐ.என்.எக்ஸ். மீடியா தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியுள்ளது உச்சநீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐயாலும் அமலாக்கத்துறையாலும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதன் பிறகு பல முறை அவர் ஜாமீன் மனு தாக்கல் செயதார். ஆனால் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்தது.

இதனிடையே சமீபத்தில் சிபிஐ வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. அதன் பின்பு அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் பெற மனுத் தாக்கல் செய்திருந்தார் ப.சிதம்பரம். இந்நிலையில் இன்று இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 106 நாட்கள் சிறைவாசத்திலிருந்து தற்போது விடுதலையாகியுள்ளார் ப.சிதம்பரம்.

ப.சிதம்பரத்திற்கு அனுமதியின்றி வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளக்கூடாது எனவும், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
கொள்ளளவை எட்டியது மதுராந்தகம் ஏரி; உபரி நீர் திறக்க வாய்ப்பு