புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 18 ஜனவரி 2019 (18:44 IST)

அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் அம்பானி

கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் மூலம் பொருட்களை வாங்குவதில் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கம்ப்யூட்டர், செல்போன் முதல் மளிகை பொருட்கள் வரை ஆன்லைனில் வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்வது எளிதாகவும், விலை குறைவாகவும், டோர் டெலிவரி செய்யப்படுவதுமே ஆன்லைன் ஆர்டர் குவிய காரணமாக உள்ளது.

இந்தியாவில் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் கோடிக்கணக்கில் நாள்தோறும் ஆன்லைனில் ஆர்டர்களை பெற்று பொருட்களை டெலிவரி செய்து வருகின்றன. அந்த வகையில் ரிலையன்ஸ் நிறுவனமும் தற்போது ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏற்கனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ அறிமுகமாகி தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்தது. அதேபோல் ஜியோ பிரெளசர் அறிமுகமாகி கூகுள் குரோம், மொசில்லா பயர்பாக்ஸ் ஆகிய பிரெளசர்களுக்கு ஆப்பு வைத்தது. இந்த நிலையில் ஆன்லைன் வர்த்தகத்தில் இறங்கி அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.