தொடர்புடைய செய்திகள்
- ஜியோவின் அடுத்த வேட்டை ஆரம்பம்: கூகுளுக்கே சவால் விடும் பிரவுசர்
- ஏர்டெல் மவுசு காலி: ஜெட் வேகத்தில் ஜியோ; முட்டுக்கொடுக்கும் பிஎஸ்என்எல்
- மொபைல் நெட்வொர்க் இல்லாமல் வாய்ஸ் கால்: சோதனையில் ஜியோ
- 10 கோடி ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் ஜியோ: கலக்கத்தில் செல்போன் நிறுவனங்கள்
- இதுவா நியூ இயர் ஆஃபர்...? முந்திக்கொண்ட வோடபோன் ஐடியா லிமிட்டெட்!
ஜியோ, ஏர்டெல் எல்லாம் ஓரம் போ... டாப் டக்கரு வோடபோன் ஐடியா!
சமீபத்தில் டிராய் வெளியிட்ட அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தது. குறிப்பாக ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அபரிவிதமாக அதிகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதே அறிக்கையில் ஏர்டெல், வோடபோன் ஐடியா, எம்டிஎன்எல், ஆர்காம் மற்றும் டாடா நிறுவன வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
தற்போது கடந்த 2018 நவம்பர் மாதம் மட்டும் வோடபோன் நிறுவனம் 65 கோடி வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தனை கோடி வாடிக்கையாளர்களை இழந்தாலும் ஏர்டெல், ஜியோவை முந்தி முதலிடத்திலேயே உள்ளது வோடபோன் ஐடியா.
அதாவது, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் வோடபோன் ஐடியா 42 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது. 31 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் இரண்டாவது இடத்தில் உள்ளது, 26 கோடி வாடிக்கையாளர்களுடன் ஜியோ மூன்றாவது இடத்தில் உள்ளது.
அடுத்த கட்டுரையில்
