1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
  4. Mukesh Ambani's Reliance jio Profit 10 thousand crore

அடிஆத்தி !!! முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ லாபம் ரூ. 10 ஆயிரம் கோடி...

Mukesh Ambanis
இந்தியாவில் ரிலையன்ஸ் நிறுவனத்தை திருபாய் அம்பானி துவங்கினாலும் அவரது புதல்வர்கள் முகேஷ் மற்றும் அனில் அம்பானிகள் இருவரும் தற்போது திறமையாக செயல்பட்டு ஆண்டுக்கு பல்லாயிரக்கான கோடிகளை வரியாக கட்டி வருகின்றனர்.
இந்நிலையில் முகேஷ் அம்பானி  சில ஆண்டுகளுக்கு முன் ஆப்பர் கொடுப்பதற்கென்றே ஆரம்பித்த ஜியோ விற்பனையில் சக்க போடு போட்டது. இதனால் ஒரே காலாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய்க்குமேல் லாபம் ஈட்டியுள்ளதாக ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இதற்கு முந்தைய காலாண்டில் ரூ.9,420 கோடியாக இருந்தது. தற்போது அந்நிறுவனத்தின் மொத்த வருவாய் 56.38% உயர்ந்து ரூ.1,60,299 கோடியாக இருக்கிறது.
 
மேலும் அதாவது ஒரே காலாண்டில் ரூ.10,251 கோடியை நிகர லாபமாக பெற்ற ஒரே நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
 
முகேஷ் அம்பானியின் வசமுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவங்கள், பெட்ரோ கெமிக்கல் போன்ற நிறுவனங்களில் லாபம் அதிகரித்துள்ளதை அடுத்து முகேஷ் ரிலையன்ஸ் இத்தைய மகத்தான சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி முகேஷ் அம்பானி கூறுகையில் : ’புதிய தலைமுறைக்கு ஏற்ப (ஜியோ) தங்கள் பொருட்களை சந்தைப்படுத்துகிறோம். அதுவே நிறுவனத்தின் வளர்ச்சிக்கும்,   வெற்றிக்கும் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.’
அடுத்த கட்டுரையில்
ஆயுள் கெட்டி ! விபத்தில் சிக்கி உயிர்பிழைத்த பிரிட்டன் இளவரசர் ...