வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 9 ஜனவரி 2019 (15:43 IST)

ஆன்லைன் மருந்து வணிகத்தினை தடை செய்ய வேண்டும் : கரூரில் மருந்து வணிகர் நல சங்கத்தினர் ஆர்பாட்டம்

இந்தியா முழுவதும் ஆன்லைன் மருந்து வணிகத்தினை தடை செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி கரூரில் மருந்து வணிகர் நல சங்கத்தினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட மருந்துவணிகர் நல சங்கத்தின் சார்பில் ஆன்லைன் மருந்து வணிகத்தினை தடை செய்யக்கோரி கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடைபெற்றது. 
 
இந்த ஆர்பாட்டத்திற்கு கரூர் மாவட்ட மருந்து வணிகர் நல சங்கத்தின் மாவட்ட தலைவர் விமலா மெடிக்கல் திருஞானம் தலைமை தாங்கினார்.
 
மேலும் இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் அனிலா ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஆர்பாட்ட முடிவில் மாவட்ட பொருளாளர் தன்வந்திரி பாலு நன்றியுரையாற்றினார். 
 
இந்த ஆர்பாட்டத்தில் கரூர் மாவட்ட மருந்து வணிகர் நல சங்கத்தின் முன்னாள் செயலாளரும், சங்கத்தின் கெளர ஆலோசகர் மேலை.பழநியப்பன்., கரூர் மாவட்ட வர்த்தக சங்க தலைவர் ராஜூ., கரூர் மாவட்ட வர்த்தக சங்க செயலாளர் கே.எஸ்.வெங்கட்ராமன் உள்ளிட்டோர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
 
இந்த ஆர்பாட்டத்தில் மத்திய அரசு உடனடியாக ஆன்லைன் மருந்து வணிகத்தினை தடை செய்வதோடு, அதன் மூலம் 2 லட்சத்திற்கு மேற்பட்ட மருந்து வணிகர்களை காக்க வேண்டுமென்றும், ஒரு முறை தடை பின்பு தடையை அகற்றுதல் என்று சென்று கொண்டே இருப்பதால் உடனடியாக போர்கால நடவடிக்கை எடுத்து, ஆன்லைன் வர்த்தகத்தினை உடனடியாக தடை செய்ய வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. 
சி.ஆனந்தகுமார்