1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Reliance bought Britain stoke park

பிரிட்டனில் ஆடம்பர விடுதியை வாங்கிய அம்பானி!

World
பிரிட்டனில் பிரபலமான தோட்டம், தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட ஸ்டோக் பார்க்கை 591 கோடி ரூபாய்க்கு ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

பிரிட்டனில் 200 வருடங்களுக்கும் மேலாக பிரபலமாக இருந்து வருவது ஸ்டோக் பார்க். அழகான தோட்டங்கள், கோல்ப் விளையாட்டு மைதானம், 49 படுக்கையறைகளுடன் கூடிய ஆடம்பர விடுதி, 14 ஏக்கரில் அரிய வகை தாவரங்களை கொண்ட பூங்கா என 300 ஏக்கர் பரப்பளவை கொண்டது இந்த ஸ்டோக் பார்க்.

இங்கு பிரபலமான ஜேம்ஸ் பாண்ட் படங்கள் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களும் படம்பிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த ஸ்டோக் பார்க்கை தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
2 மாதங்களுக்கு 5 கிலோ தானியங்கள் இலவசம்: பிரதமர் மோடி உத்தரவு