1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (11:38 IST)

இந்திய வீரர்களை மறந்தது தப்புதான்.. மன்னிச்சிடுங்க! – மன்னிப்பு கோரிய பிரிட்டன்!

முதல் உலக போரில் பிரிட்டனுக்காக போரிட்டு இறந்த வீரர்களை இன ரீதியாக ஒதுக்கியதற்காக பிரிட்டன் மன்னிப்பு கோரியுள்ளது.

முதல் உலகப் போர் நடைபெற்ற 1914-18 காலக்கட்டத்தில் இந்தியா பிரிட்டன் ஆளுகைக்குட்பட்டு இருந்த நிலையில் இந்தியாவிலிருந்து சுமார் 14 லட்சம் வீரர்கள் பிரிட்டன் ராணுவத்திற்காக முதல் உலகப்போரில் போரிட்டனர். இதில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

ஆனால் அவ்வாறாக இறந்த இந்திய வீரர்களுக்கு பிரிட்டன் எந்த அங்கீகாரமும் அளிக்காததோடு, வரலாற்றிலும் தொடர்ந்து அவர்களது பங்களிப்பை குறிப்பிடாமலே இருந்து வந்தது. இது இனரீதியான பாகுபாடு என பலர் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது பிரிட்டன் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் சட்டப்பேரவையில் பேசியுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் பென் வாலஸ் “இந்திய வீரர்கள் நினைவு கூரப்படுவதில் இனரீதியான பாகுபாடு காட்டப்பட்டுள்ளது என்பதில் சந்தேகமே இல்லை. எனவே பிரிட்டன் அரசு சார்பாக நான் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.