புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 3 டிசம்பர் 2021 (18:37 IST)

ஜாவத் புயல் எதிரொலி: 2 மாநிலங்களுக்கு ரெட் அலர்ட்!

ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

 
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக உருமாறி இருக்கும் நிலையில் இந்த புயலுக்கு ஜாவத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் தீவிர புயலாக மாறி வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரை இடையே நாளை மறுநாள் கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனால் ஆந்திரா, ஒடிசா மாநிலங்களுக்கு அதி தீவிர கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் எச்சரிக்கை காரணமாக ஒடிசா வழியாக செல்லும் 95 விரைவு ரயில்கள் இன்று முதல் 3 நாட்கள் ரத்து செய்யப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
 
மேலும் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்க மாநிலங்களில் புயல் பாதிப்பு பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். அத்தியாவசிய சேவைகள் பொதுமக்களுக்கு தடை இல்லாமல் கிடைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.