1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Warning in harbors due to cyclone

ஜாவத் புயல்... துறைமுகங்களில் எச்சரிக்கை!

Storm
ஜாவத் புயல் நாளை கரையை கடக்க உள்ளதால் தமிழகத்தில் உள்ள துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம். 

 
கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக் கடலில் தோன்றிய வளிமண்டல காற்றழுத்த தாழ்வு தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என்றும் தமிழகத்தில் வரும் 6 ஆம் தேதி வரை இந்த புயல் காரணமாக பரவலாக மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஜாவத் என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த புயலால் ஆந்திரா, ஒடிசா மாநில கடலோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால் நாகப்பட்டினம், காரைக்கால், ராமேஸ்வரம், பாம்பனில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து எண்ணூர், கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களிலும் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
About Writer
Sugapriya Prakash