தொடர்புடைய செய்திகள்
- 100 நாளும் உள்ளேதான், யாரும் வெளியே வரமுடியாது: பிக்பாஸ் நிகழ்ச்சியில் புது நிபந்தனை!
- நரம்பியல் பிரச்சனையை இழுத்துவிட்ட கொரோனா தடுப்பூசி..?
- கடைசியா காதுல பூ வெச்சிட்டிங்களே! – அரியர் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
- இந்தி தெரியாது போடா ஹேஷ்டேக்கால் பத்திக் கொண்ட வியாபாரம்!
- 10 ஹீரோக்கள்… 25 இயக்குனர்கள் மட்டும்தான் தியேட்டருக்காக படம் எடுப்பார்கள் – வெற்றிமாறன் சொல்லும் அதிர்ச்சி தகவல்!
அறிகுறி இருப்பவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் மறு பரிசோதனை: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களுக்கு செய்த பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் அவர்களுக்கு மீண்டும் மறு பரிசோதனை செய்ய வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட போது அவர்களுக்கு சில சமயம் நெகட்டிவ் ரிசல்ட் வருகிறது. அதன் பின்னர் அவர்களுக்கு சில நாட்கள் கழித்து மீண்டும் பாசிட்டிவ் வருகிறது. இது பரிசோதனைகளில் கோளாறா? அல்லது வேறு என்ன என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை
இந்த நிலையில் கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் அவர்களுக்கு மறு பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும் என்றும் ரேபிட்கிட் பரிசோதனைகளில் கொரோனா இல்லை என்ற தகவல் வந்தாலும் சிலருக்கு அறிகுறி இருப்பதை மத்திய சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது
மேலும் கொரோனா நோயாளிகளை தவற விடவில்லை என்பதை அனைத்து மாநிலங்களும் உறுதி செய்ய வேண்டும் என கூறிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கொரோனா நெகட்டிவ் இருந்தாலும் அவர்களுக்கு அறிகுறி இருந்தால் தனிமைப்படுத்தி மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு உள்ளது
மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு அதிகாரி அல்லது ஒரு குழுவை நியமித்து கொரோனா நோயாளிகளை கண்டறிய வேண்டும் என்றும் ரேபிட்கிட் சோதனை விவரங்களை பகுப்பாய்வு செய்து கொரோனா இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
