10 ஹீரோக்கள்… 25 இயக்குனர்கள் மட்டும்தான் தியேட்டருக்காக படம் எடுப்பார்கள் – வெற்றிமாறன் சொல்லும் அதிர்ச்சி தகவல்!
கொரோனாவுக்கு பிறகு தமிழ் சினிமாவின் நிலை மாறும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக சினிமா திரையரங்குகள் மூடப்பட்டு 5 மாதங்களுக்கு மேல் ஆகின்றன. இதனால் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி சினிமா ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படியே திறந்தாலும் முதலில் 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே பார்வையாளர்கள் நிரப்ப அனுமதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.
இதனால் தமிழ் சினிமாவின் நிலை வெகுவாற மாறும் என சொல்லப்படுகிறது. இதுபற்றி தமிம் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன் ‘கொரோனாவுக்கு பின் தமிழ் சினிமாவின் முன்னணி 10 ஹீரோக்கள் நடிக்கும் படங்கள் மட்டுமே தியேட்டருக்காக எடுக்கப்படும். அவர்களை இயக்கும் 25 இயக்குனர்கள் மட்டுமே இருப்பார்கள். மற்றவர்கள் எல்லாம் வேறு தளங்களுக்கு இடம்பெயர்வார்கள். இதனால் நம் கதை சொல்லல் முறையில் மிகப்பெரிய மாற்றம் வரும்’ எனக் கூறியுள்ளார்.