தவெக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரவழைக்க, வேண்டுமென்றே மின் தடையா? திமுக ஆதரவு அதிகாரிகள் வேலையா?
சென்னையின் பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, இரவு நேரங்களில் ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும் ஒருமுறை தொடர்ச்சியாக மின்சாரம் தடைப்படுவதால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் தூக்கமின்றி பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள மூத்த பத்திரிகையாளர் சாய் ஜெகதீஷ், தற்போதைய புதிய தவெக அரசின் மீது பொதுமக்களுக்கு வேண்டுமென்றே கோபத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற திட்டமிட்ட உள்நோக்கத்துடன் இந்த மின்தடை ஏற்படுத்தப்படுகிறதா என்ற பலத்த சந்தேகம் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மின்சாரத் துறையில் உள்ள முந்தைய திமுக ஆட்சிக்கால ஆதரவாளர்கள் அல்லது ஊழியர்கள் ஒருங்கிணைந்து இந்த சதிச் செயலில் ஈடுபடுகிறார்களா என்பதை அரசு உடனடியாகக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எனவே, இந்த விவகாரத்தில் தமிழக மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் அவர்கள் உடனடியாக தலையிட்டு, கள நிலவரத்தை நேரில் ஆராய்ந்து, சதி வேலையில் ஈடுபடும் நபர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சென்னையின் தடையில்லா மின்சாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை பொதுமக்கள் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Edited by Siva
