இனிமேல் யுபிஐ மூலம் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் போய் சேர 1 மணி நேரம் ஆகுமா? என்ன காரணம்?
டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளில் அதிகரித்து வரும் மோசடிகளை கட்டுப்படுத்த, இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய அதிரடி திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதன்படி, யுபிஐ அல்லது ஐஎம்பிஎஸ் மூலம் 10,000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால், ஒரு மணிநேர 'கூலிங் பீரியட்' அமல்படுத்தப்பட உள்ளது. அதாவது, நீங்கள் அனுப்பும் பணம் பெறுநரின் கணக்கிற்கு செல்ல ஒரு மணிநேரம் தாமதமாகும்.
இந்த ஒரு மணிநேர இடைவெளியில், பணத்தை அனுப்பியவர் பரிவர்த்தனையை சரிபார்க்கவும், ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதை ரத்து செய்யவும் முடியும்.
இந்தியாவில் 2026-ல் ஆன்லைன் மோசடிகள் 22,000 கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. குறிப்பாக, சமூக வலைதளங்கள் மூலம் மக்களை மிரட்டியோ அல்லது ஆசை காட்டியோ செய்யப்படும் 'சோஷியல் இன்ஜினியரிங்' மோசடிகளைத் தடுக்க இது உதவும்.
இருப்பினும், கடைகளில் ஸ்கேன் செய்து பணம் செலுத்துவதற்கும் ஏற்கனவே நம்பிக்கைக்குரிய பட்டியலில் உள்ளவர்களுக்கும் பணம் அனுப்ப இந்த விதிமுறை பொருந்தாது.
மேலும், 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 50,000 ரூபாய்க்கு மேல் அனுப்பினால், அவர்களின் நம்பிக்கைக்குரிய ஒருவரின் அனுமதி கட்டாயமாக்கப்பட உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஒரே கிளிக்கில் முடக்கும் 'கில் ஸ்விட்ச்' வசதியையும் கொண்டுவர ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.
Edited by Siva