சிம்புவுக்கு நடிகை கீர்த்தி சுரேஷ், மஹத் வாழ்த்து...

Sinoj| Last Updated: புதன், 3 பிப்ரவரி 2021 (23:25 IST)

சிம்பு இன்று தனது 38 வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்குப் பலரும் வாழ்த்துத் தெரிவித்துவரும் நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் மஹத் இருவரும் அவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: உங்களுக்கு இந்த வருடம் நிறைய வெற்றிகளும் மகிழ்ச்சியும் கிடைக்க வேண்டுமென்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல்,மஹத் சிம்புவின் டுவிட்டர்
கணக்கிலேயே வந்து, உங்களை 22 வருடங்களாகத் தெரியும். நீங்கள் தான் பெஸ்ட், உங்களை விரும்புகிறேன்..உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.


மேலும்,சிம்புவின் பிறந்தநாள் வாழ்த்துச் செய்தியாக இயக்குநர் கௌதம் மேனன், அடுத்து அவரை வைத்து இயக்கவுள்ள படம் குறித்துப் பதிவிட்டுள்ளார்.

அதில், சிம்புவின்47 வது படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார், இப்படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று சிம்புவின் மாநாடு பட டீசர் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.இதில் மேலும் படிக்கவும் :