செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (21:41 IST)

அன்பு தம்பி சிம்பு, சர்வ வெற்றீஸ்வரனாக வாழ்த்துகள்! பிரபல இயக்குனர் டுவீட்

நடிகர் சிம்பு நாளை தனது பிறந்தநாளை கொண்டாட இருப்பதை அடுத்து திரை உலகினர்களும் ரசிகப் பெருமக்களும் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்
 
நேற்று முதல் சிம்புவின் காமன் டிபி போஸ்டரை திரையுலக பிரமுகர்கள் பலர் வெளியிட்டார்கள் என்பதும் அந்த காமன் டிபி போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
ஏற்கனவே சிம்புவின் பிறந்த நாள் குறித்த ஹேஷ்டேக் இன்று காலை முதல் டிரென்ட் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நள்ளிரவு சரியாக 12 மணிக்கு சிம்புவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூற அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்
 
இந்நிலையில் இயக்குனர் மற்றும் நடிகரான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் சிம்புவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அன்பு தம்பி சிம்பு சர்வ வெற்றீஸ்வரனாக வாழ்த்துக்கள் என அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார்