புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 3 அக்டோபர் 2018 (11:00 IST)

11 ஆயிரம் டின் பீர்களை காலி செய்த எலிகள்?

பீகாரில் பறிமுதல் செய்யப்பட்ட 11 ஆயிரம் டின் பீர்களை எலிகள் குடித்துவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
பீகார் மாநிலம் முழுவதிலும் இருந்து சட்டவிரோதமாக விற்பனை செய்யும் ஏராளமான மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்வது வழக்கம். அவ்வாறு பறிமுதல் செய்யப்படும் மதுபாட்டில்களை வழக்கு விசாரணை முடியும் வரை பாதுகாப்பது போலீஸாரின் கடமையாகும்.
 
இந்நிலையில் போலீஸார் பறிமுதல் செய்த 11 ஆயிரம் டின் பீர்கள் தொடர்பான வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. டின் பீர்களை ஆய்வு செய்த நீதிபதிகளுக்கு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அனைத்து டின்களும் துளையிடப்பட்டிருந்தது. அதில் பீரும் இல்லை.
 
இதுகுறித்து விளக்கமளித்த, காவல் அதிகாரிகள் அனைத்து டின் பீர்களையும் எலி குடித்துவிட்டது என கூறியுள்ளனர். 
 
இதேபோல் சில ஆண்டுகளுக்கு முன்பு, மதுபாட்டிகளின் மூடியை கடித்து எலிகள் மதுவை குடித்துவிட்டது என போலீஸார் நொண்டி சாக்கு கூறினர். பின் நடத்தப்பட்ட விசாரணையில் போலீஸாரே மதுவை குடித்து காலி பண்ணியது வெளிச்சத்திற்கு வந்தது. 
 
இதனையடுத்து நீதிபதிகள் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.