திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 21 ஆகஸ்ட் 2018 (16:05 IST)

பீகாரில் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற ஊர்மக்கள்

பீகாரில் விபச்சார கும்பல் பகுதியில் தங்கியிருக்கும் பெண் ஒருவரை ஊர்மக்கள் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைந்துச் என்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள தாமோதர்பூர் என்ற கிராமத்தைச் சேர்ந்த பிம்லேஸ் ஷா(20) என்ற இளைஞரை காணவில்லை என்று தேடிய ஊர்மக்கள் பிகியாவில் உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே பிணமாக கண்டெடுத்தனர்.
 
அவரை அந்த பகுதியில் வசிக்கும் விபச்சார கும்பல்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கருதிய ஊர்மக்கள் அதிலும் குறிப்பாக ஒரு பெண் மீது சந்தேகப்பட்டனர். அந்த பெண்ணை நிர்வாணமாக்கி அந்த பகுதியில் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர். அவரை அடித்து உதைத்து தாக்கினார்.
 
இதுதொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் உடனே சம்பவே இடத்திற்கு விரைந்தனர். அந்த கும்பலுக்கும், காவல்துறையினருக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. கலவரத்தை கட்டுப்படுத்த போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர் கடின முயற்சிக்கு பின் காவல்துறையினர் கலவரத்தை அடக்கி அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
மேலும் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.