வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 22 ஜூலை 2018 (10:00 IST)

சென்னை தனியார் மருத்துவமனை கட்டிட விபத்து - பீகார் இளைஞர் பலி

சென்னை கந்தன்சாவடியில் புதிதாக கட்டப்பட்டு வந்த தனியார் மருத்துவமனை விபத்துக்குள்ளானதில் பீகார் மாநில இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சென்னை கந்தன் சாவடி பகுதியில் தனியார் மருத்துவமனை ஒன்றின் கட்டிடப் பணி நடந்து வருகிறது. நேற்றிரவு கட்டிடத்தின் கான்கிரீட் போடும் பணி நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பாரம் தாங்காமல் கட்டிடத்தின் இரும்பு சாரம் திடீரென சரிந்து விழுந்தது. சற்றுநேரத்தில் கட்டிடம் முழுவதுமாக தரைமட்டமானது.
 
இந்த விபத்தில் ஏராளமான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். இந்த விபத்து குறித்த தகவல் அறிந்ததும் விரைந்து வந்த மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியிருந்த 27 பேரை மீட்டனர். மேலும் பலரை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த விபத்தில் பீகார் மாநிலத்தை சேர்ந்த பப்லு என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இடிபாடுகளில் சிக்கி சிகிச்சை பெற்று வரும் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து போலீஸார் கட்டிட பொறியாளர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.