இந்த முறை உடைகிறதா சிவசேனா? மூத்த தலைவர் கட்சியில் இருந்து விலகல்!
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை இரண்டாக உடைத்த பாஜக, அந்த கட்சியில் இருந்து அஜித் பவார் என்பவரை ஒரு பிரிவாக அமைத்து, தனது ஆட்சிக்கு ஆதரவு தர வைத்தது
இருப்பினும் பாஜக மற்றும் அஜித்பவார் கூட்டணியில் அமைந்த இந்த ஆட்சி 52 மணிநேரங்கள் மட்டுமே நீடித்தது. நேற்று மாலை முதல்வர் பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகிய இருவரும் ராஜினாமா செய்ததை அடுத்து. ஆட்சி முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் சிவசேனாவின் ஆட்சி அடுத்து அமையும் என்றும் அந்த ஆட்சிக்கு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முதல்வராக உத்தவ் தாக்கரே அவர்கள் பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர், அதே கட்சிகளுடன் கூட்டணி வைப்பது முரண்பாட்டின் மொத்த உருவமாக இருப்பதாக சிவசேனா கட்சியில் இருந்த சிலர் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்
இதனை அடுத்து சிவசேனா கட்சியிலுள்ள மூத்த தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர் சிவசேனாவில் இருந்து திடீரென விலகியுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் தான் தான் பதவி விலகி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்
இதனையடுத்து ரமேஷ் சோலங்கி தலைமையில் சிவசேனாவின் ஒரு பிரிவு உடைய வாய்ப்பு இருப்பதாகவும் அந்தப் பிரிவு பாஜகவுக்கு ஆதரவு கொடுக்கலாம் என்றும் அரசியல் வதந்திகள் பரவி வருகின்றன
தேசியவாத காங்கிரஸ் கட்சிகயுடன் கூட்டணி வைத்த பாஜகவின் திட்டம் தோல்வி அடைந்ததை அடுத்து தற்போது சிவசேனாவை உடைக்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது
மொத்தத்தில் மகாராஷ்டிராவில் அரசியல் குழப்பம் எப்போதுதான் முடிவுக்கு வரும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்