திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Modified: செவ்வாய், 26 நவம்பர் 2019 (20:23 IST)

அரசியல் குழப்பத்திற்கு முடிவு : மஹாராஷ்டிரா முதல்வர் ஆகிறார் உத்தவ் தாக்கரே !!

மும்பையில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவவாத காங்கிரஸ் மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் ஆகிய மொத்தம்’ 162 எம்.எல்.ஏக்கள்  இணைந்து, தங்களின் பெரும்பான்மையுடன் , இக்கூட்டணிக்  கட்சியின்  ஆட்சி அமைக்க,    முழுமனதுடன் ஆதரவளிப்பதாக உத்தரவாதம் அளித்துள்ளனர்.
அதனையடுத்து, மஹாராஷ்டிரா முதல்வராகப் பொறுப்பேற்ற பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ், மற்றும் துணை முதல்வராக பதவியேற்ற அஜித் பவார் ஆகியோர் நாளை தங்கள் கட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்று தெரிந்து இன்று  தங்களின் பதவியை ராஜினாமா செய்து உள்ளனர். 
 
இந்நிலையில், சிவசேனா, தே.காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கூட்டணி என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அக்கூட்டணி கட்சியினரால் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக உத்தவ் தாக்கரே ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
 
மேலும், அந்தக் கூட்டணி தலைவராக உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவர் நாளை ஆளுநரை சந்தித்து உரிமைகோர உள்ளதாகவும், டிசம்பர் 1 ஆம் தேதி அவர் பதவி ஏற்கும் விழா நடைபெறும் என தகவல்கள் வெளியாகிறது.