1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Rajastan cm affected by corona virus

ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா தொற்று: வீட்டுத்தனிமையில் இருப்பதாக தகவல்..!

ராஜஸ்தான்
ராஜஸ்தான் முதல்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் வீட்டு தனிமையில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது என்பதும் தினசரி கொரோனா வைரஸ் பாதிப்பு 3000ஐ தாண்டி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
தமிழகத்தில் பல மாதங்களுக்கு பின் இன்று கொரோனாவால் ஒரு உயிர் பலியாகி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறது. 
 
இந்த நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து தனிமையில் இருப்பதாகவும் அவருக்கு தகுந்த சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் ராஜஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
சமூக நீதி மாநாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பு, தனியார் துறையில் இட ஒதுக்கீட்டிற்கு கோரிக்கை