வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 27 பிப்ரவரி 2018 (23:25 IST)

பெண்கள் பெட்டியில் காலி இடங்கள் இருந்தால் என்ன செய்வது? ரயில்வே துறை அதிரடி முடிவு

ஒவ்வொரு முக்கிய ரயில்களிலும் பெண்களுக்கு என தனி பெட்டி ஒன்று ஒதுக்கப்பட்டிருக்கும். தனியாக பயணம் செய்யும் பெண்கள் பாதுகாப்பாக பயணம் செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கம்

இந்த நிலையில் ஒருசில நேரங்களில் ரயில்களில் பெண்கள் பெட்டியில் அதிக காலியிடங்கள் இருப்பதாக ரயில்வே துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

இந்த நிலையில் ரயில்களில் பெண்களுக்கான பெட்டியில் காலி இடங்கள் இருந்தால், அவை காத்திருப்புப் பட்டியலில் உள்ள பெண்களுக்கு  ஒதுக்கப்படும் என்று ரயில்வே துறை அறிவித்துள்ளது..

ஒவ்வொரு ரயிலும் புறப்படுவதற்கு முன்னர் முன்பதிவு செய்த பயணிகளின் பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டு அந்த பட்டியலில் பெண்கள் இருந்தால் அவர்களுக்கு பெண்கள் பெட்டியில் உள்ள காலியிடங்கள் அளிக்கப்படும். பெண்களுக்கு ஒதுக்கியது போக மீதி காலியிடம் இருந்தால் அந்த இருக்கைகள் முதியவர்களுக்கு ஒதுக்கப்படும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது.