மத்திய ரயில்வே பட்ஜெட் : அருண் ஜேட்லி வாரி வழங்கிய சலுகைகள்

Last Modified வியாழன், 1 பிப்ரவரி 2018 (12:19 IST)
மத்திய அரசின் சார்பாக 2018ம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார  பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தற்போது பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.

 
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று காலை 11 மணிக்கு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
அப்போது ரயில்வே பட்ஜெட் பற்றி அவர் உரையாற்றும் போது கூறியதாவது:
 
* 600 ரயில் நிலையங்கள் புதுப்பிக்கப்படும்.
 
* பனிமூட்டத்தின்போது ஏற்படும் ரயில் விபத்துகளை தவிர்க்க சிறப்பு கருவிகள் வாங்கப்படும்.
 
* 4000-க்கும் மேற்பட்ட ஆளில்லா லெவல் கிராசிங்குகளில் ஆட்கள் நியமிக்கப்படும்.  
 
* சென்னை பெரம்பூரில் அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும்.
 
* எல்லா ரயில் நிலையங்களிலும் வைஃபை மற்றும் சிசிடிவி வசதி ஏற்படுத்தப்படும். 
 
*  25 ஆயிரம் ரயில்வே நிலையங்களில் எஸ்கலேட்டர் அமைக்கப்படும். 
 
* பெங்களூருவில் 17000 கோடியில் புறநகர் ரயில் சேவை ஏற்படுத்தப்படும்.
 
* 3600 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதைகள் சீரமைக்கப்படும். 
 
* 2019-க்குள் 4000 கிலோமீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்படும். 
 
* ரயில்வே திட்டங்களுக்கு ரூ.1.48 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும்.
 
* நாட்டில் 4257 ஆளில்லா ரயில்வே கிராசிங்குகள் அகற்றப்படும்.
 
* 18 ஆயிரம் கிலோ மிட்டருக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கப்படும்


இதில் மேலும் படிக்கவும் :