சாத் பூஜையையொட்டி ரயில் கட்டணம் பல மடங்கு உயர்வு
வடமாநிலங்களில் சாத் பூஜையையொட்டி ரயில் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
வடமாநிலங்களில் கொண்டாடப்படும் சாத் பூஜையையொட்டி இதுவரை இல்லாத அளவில் ரயில்களில் கட்டணம் உயர்ந்துள்ளது.
அதாவது சவீதா விரைவு ரயிலில் அடிப்படைக் கட்டணம் ரூ.2950 என்றாலும், டைனமிக் கட்டணம் என்ற பெயரில் கூடுதலாக ரூ.6555 வசூலிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
மேலும், இந்தக் கட்டண உயர்வினால் புலம்பெயர் தொழிலாளர்கள், பயணிகள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.2 ஆம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளும் குறைக்கப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.