வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 18 நவம்பர் 2023 (16:59 IST)

IND- AUS- இறுதிப் போட்டிக்கான VIP கட்டணம் ரூ.8 லட்சத்திற்கு விற்பனை

india -australia
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான உலகக் கோப்பை இறுதிப் போட்டியையொட்டி  இந்திய ரசிகர்கள் இந்தியா ஜெயிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

இந்தியாவில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்து வரும் நிலையில், முதல் அரையிறுதியில்  இந்திய அணி , நியூசிலாந்தை வீழ்த்தியது. எனவே வரவுள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.

இந்த இறுதிப் போட்டி குஜராத் மாநிலம் அகமபாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது.

இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள நிலையில், நாளைய இறுதிப் போட்டியிலும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பது இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இந்த  நிலையில்,  உலகக் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி இறுதிப் போட்டியிலும் வெற்றி பெறும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

இந்த நிலையில்  உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில், பலம் வாய்ந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மோதவுள்ளதால், உலகெங்கிலும் உள்ள ரசிகர்கள் இப்போட்டியை பார்க்க ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே அகமதாபாத்தில் உள்ள ஓட்டல் அறைகளில் வாடகை அதிகரித்து, விமானங்களிலும் கட்டணம் அதிகரித்ததாக கூறப்படும் நிலையில், ரூ.19000 க்கு விற்கப்பட வேண்டிய இப்போட்டிக்கான  VIP கட்டணம்  ரூ.8 லட்சத்திற்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.