ராகுலின் பாத யாத்திரையை விமர்சிக்க பாஜகவிற்கு தகுதியில்லை-நாராயணசாமி
ராகுல்காந்தியின் பாதயாத்திரையை விமர்சனம் செய்ய பாரதிய ஜனதா கட்சிக்கு தகுதியில்லை என புதுவை மாநில முன்னாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் தெரிவித்துள்ளார்
ராகுல்காந்தியின் ஒற்றுமைப் பயணம் என்ற பாதயாத்திரையை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த பாதயாத்திரை குறித்தும் அவர் அணிந்து டி-ஷர்ட் குறித்தும் பாஜகவினர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்
இந்த நிலையில் ராஜீவ் காந்தி பாதயாத்திரையை குறித்து பொய்யான குற்றச்சாட்டை பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர் என்றும் ராகுல் காந்தி மீதான விமர்சனத்தை பாஜக தவிர்க்க வேண்டும் என்றும் ராகுல் காந்தி குறித்து விமர்சனம் செய்ய பாஜகவுக்கு தகுதி இல்லை என்று முன்னாள் புதுவை முதல்வர் நாராயண சாமி கூறியுள்ளார்