திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 15 செப்டம்பர் 2022 (12:13 IST)

உ.பி கொடூரம்: ராகுல் காந்தி கடும் கண்டனம்!

உத்தரப்பிரதேச மாநில சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் மாவட்டத்தின் நிகாசன் தாலுகாவின் தமோலின்பூர்வா கிராமத்தில், கரும்பு தோட்டத்தில் உள்ள மரத்தில் இரண்டு இளம்பெண்களின் சடலங்கள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. மைனர் பெண்கள் இருவரும் சகோதரிகள்.

பெண்களின் தாயார் மாயா தேவி, அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் தான் தனது மகள்களை கடத்தி சென்றுள்ளனர் என்றும் அவர்கள் தான் கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டுள்ளனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
இந்நிலையில் இச்சம்பவத்திற்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பட்டியல் வகுப்பை சேர்ந்த 2 சிறுமிகள் பட்டப்பகலில் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. பாலியல் குற்றவாளிகளை விடுவிப்பவர்களிடம் இருந்து பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை நாம் அனைவரும் உருவாக்க வேண்டும் என தனது கண்டனத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.