அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட உரையை மீண்டும் சேர்க்க வேண்டும்: ராகுல் காந்தி கடிதம்..!
அவை குறிப்பில் நீக்கப்பட்ட தனது உரையின் சில பகுதிகளை மீண்டும் அவை குறிப்பில் சேர்க்க வேண்டும் என எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிர்லா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று பாராளுமன்றத்தின் மக்களவையில் பேசிய போது சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியதாக கூறப்பட்டது. குறிப்பாக இந்து மதம் குறித்து அவர் விமர்சனம் செய்ததாகவும் நீட் தேர்வு மற்றும் அதானி, அம்பானி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகவும் அந்த கருத்துக்கள் அனைத்தும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியானது.
ராகுல் காந்தியின் உரையின் சில பகுதிகளை அவை குறிப்பில் இருந்து நீக்கியதற்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று ராகுல் காந்தி சபாநாயகர் ஓம் பிரகாஷ் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட தனது உரையின் பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என்றும் அவை குறிப்பில் இருந்து தனது கருத்துக்களை நீக்கியது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் கூறியுள்ளார்.